
கொரோனா குமார் வழக்கு : ரூ.1 கோடி செலுத்த சிம்புவுக்கு கோர்ட் உத்தரவு
இந்த நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்களது நிறுவனம் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிகர் சிம்பு என்ற சிலம்பரசனை நடிக்க ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு 9.5 கோடி ஊதியம் பேசப்பட்டு அதில் 4.5 கோடியை முன்பணமாக கடந்த 2021ம் ஆண்டு வழங்கினோம். ஆனால் பணம் பெற்றுக்கொண்ட பிறகு அவர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுக்க முன்வரவில்லை. எனவே எங்களது கொரோனா குமார் படத்தை நடித்துக் கொடுக்காமல் அவர் வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் வேல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த ஆதார ஆவணத்தில் சிம்புவுக்கு ஒரு கோடி கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது வேறு வகையில் மீதி பணம் கொடுக்கப்பட்டதாகவும் அதற்கான ஆவணத்தை தாக்கல் செய்வதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி 1 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகர் சிம்பு வருகிற செப்டம்பர் 19ம் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!