
தேசிய விருதுகள் மீது நம்பிக்கை இல்லை : விஷால்
அவர் கூறுகையில், “சூப்பர் ஸ்டார்" என்பது ரஜினிக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பட்டம். 45 ஆண்டுகளாக அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இந்த வயதிலும் அவர் நடிப்பது எங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஊக்கமளிக்கிறது. அவர் ஓய்வெடுக்கலாம், ஆனால் மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என நினைப்பதுதான் சூப்பர் ஸ்டாருக்கான அர்த்தம்” என்றார்.
தேசிய விருதில் தமிழ் படங்களின் புறக்கணிப்பு குறித்து கேட்டபோது “என்னை பொறுத்தவரையில், தேசிய திரைப்பட விருதுகள் உள்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. 4 பேர் அமர்ந்து ஒருவருக்கு விருது என தீர்மானிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு விருது அளிப்பது ரசிகர்கள்தான். ஒரு குழு சார்ந்த ஆலோசனைதான் தேசிய விருதுகளின் பட்டியல்” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!