
பக்கெட்டில் நிரப்பும் அளவிற்கு பார்வதியை கண்ணீர் சிந்த வைத்த ரன்வீர் சிங் படம்
கடந்த வாரம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக 90களில் பார்த்த படங்களின் உணர்வை இது கொடுத்திருப்பதாக படம் பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் டி சர்ட்டின் காலர் நனைந்து ஒரு பக்கெட்டில் நிரப்பும் அளவிற்கு கண்ணீர் விட்டேன்"" என்று கூறியுள்ளார். மேலும், ரன்வீர் சிங் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பற்றி குறிப்பிட்டுள்ள பார்வதி, “எனக்கும் இப்போது ஒரு ராக்கிவாலா தேவைப்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.
பார்வதியின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!