
தண்டட்டி, தங்கப் பொண்ணு - ரோகிணி மகிழ்ச்சி
இந்நிலையில் இப்படம் கடந்த வெள்ளியன்று ஓடிடி தளத்தில் வெளியானது. யதார்த்தமான படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் தற்போது ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். படத்தில் வயதான பாட்டியாக "தங்கப் பொண்ணு" என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோகிணி அப்படி ஒரு பாராட்டைப் பகிர்ந்து, “"தண்டட்டி" படம் ஓடிடியில் வெளியானதும், அதிகமாக கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. நான் முன்பே சொன்னது போல தங்கப்பொண்ணு என் திரை வாழ்வில் முக்கியமான கதாபாத்திரம், நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தியேட்டர்களில் வரவேற்பைப் பெறாமல், பின் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெறும் படங்களின் வரிசையில் "தண்டட்டி" படமும் சேர்ந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!