
விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர்
விஷால், பிரியா பவானி சங்கர் முதல் முறையாக ஜோடி சேரும் படம் இது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை வழக்கம் போல ஒரு ஆக்ஷன் படமாகத்தான் இயக்க உள்ளார் ஹரி. படத்திற்காக வெளியான போஸ்டரிலேயே இயக்குனர் ஹரி தன்னுடைய டிரேட் மார்க்கானை அரிவாளையும் டிசைனில் வைத்துள்ளார்.
இயக்குனர் ஹரி கடைசியாக இயக்கிய "யானை" படம் கடந்தாண்டு வெளிவந்தது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஷாலின் 34வது படத்தை ஆரம்பித்துள்ளார். யானை படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்து, தமிழகத்தின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு படமாக்கப்படவுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!