துணிவு படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை வினோத் இயக்குகிறார் என்று சமீபத்தில் அறிவித்தனர். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்து மற்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்த நிலையில் ல நாட்களுக்கு முன் "உடன் பிறப்பே" பட இயக்குனர் சரவணினின் இல்ல விழாவில் வினோத் கலந்து கொண்டார். அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது; " இந்த ஊரின் இயற்கையான சூழல் எனக்கு பிடித்திருக்கிறது. இங்கேயே தங்கி விடலாம் என நினைக்க வைக்கிறது. அடுத்த படம் கமல்ஹாசனை வைத்து இயக்குகிறேன். இது விவசாயம் சார்ந்த படம் இல்லை . கமல்ஹாசன் உடன் இரண்டு, மூன்று கதைகளை பேசினேன். அப்போது அவர் எனக்கு சொன்ன சில கதைகள் மிகவும் பிடித்து இருந்தது. அதனால் அந்த கதைக்கு நான் இப்போது திரைக்கதை எழுதி இயக்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!