
இறுதிகட்டத்தில் வள்ளி மயில்
1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் விசாரணை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கிறார். நாடக குழு தலைவராக பாரதிராஜா நடிக்கிறார். 1980 கால கட்ட கதை என்பதால் திண்டுக்கல் நகரில் அந்த காலகட்ட பின்னணியைக் கொண்டு வரும் வகையில், பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து, கொடைக்கானல், சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நடந்தது.
தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் நடந்து வருகிறது. இங்கு தொடர்ந்து 24 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாதத்துடன் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் சென்னையில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டிற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!