
விக்ரம் ரதோட் ஆக மாறிய தமிழரசன்
இப்படத்திற்கான எந்த ஒரு புரமோஷன் நிகழ்விலும் பட வெளியீட்டின் போது விஜய் ஆண்டனி கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் அவரது இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான "பிச்சைக்காரன் 2" படத்திற்காக தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல புரமோஷன்களைச் செய்தார். தமிழில் சரியாக ஓடாத "பிச்சைக்காரன் 2", தெலுங்கில் சில பல கோடிகள் லாபத்தைக் கொடுத்துள்ளது.
அதனால், தற்போது "தமிழரசன்" படத்தை "விக்ரம் ரதோட்" என்ற பெயரில் டப்பிங் செய்து தெலுங்கில் வெளியிட உள்ளார்கள். படத்தின் முதல் பார்வை போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்கள். படம் விரைவில் தெலுங்கில் வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!