
தண்டட்டி வெளியீட்டிற்கு முன்பாக நடந்த அண்டாவ காணோம் பத்திரிகையாளர் காட்சி
இந்நிலையில் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடித்துள்ள "தண்டட்டி" படத்தின் கதையும், "அண்டாவ காணோம்" படத்தின் கதையும் ஒன்றுதான் என "அண்டாவ காணோம்" படத்தின் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் குற்றம் சாட்டி இருந்தார். அப்படியிருந்தால் "தண்டட்டி" படத்தை வெளியிட தடை விதிக்கும்படியும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
"தண்டட்டி" படம் அடுத்த வாரம் ஜுன் 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் "அண்டாவ காணோம்" படத்தை நேற்றே பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளர். "தண்டட்டி" படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக "அண்டாவ காணோம்" படத்தைப் பார்த்தால்தான் இரண்டு கதையும் ஒன்றாக இருப்பது தெரிய வரும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. "அண்டாவ காணோம்" படம் வெளிவர இன்னும் ஒரு மாத காலம் ஆகலாம், அதுவரை படத்தின் விமர்சனத்தையும் வெளியிட வேண்டாம் என்றும் நேற்று கேட்டுக் கொண்டார்கள்.
இந்த கதை சர்ச்சை குறித்து "தண்டட்டி" தரப்பிலிருந்து இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!