
தமிழ் சினிமாவில் அறிமுகமான வெளிநாட்டு நடிகை
தனது சினிமா அறிமுகம் குறித்து அவர் கூறியதாவது: எனது தந்தை ஜெர்மானியர், எனது தாய் இலங்கை தமிழ் பெண். இருவரும் காதலித்து திருமணம் செய்து என்னை பெற்றெடுத்தார்கள். ஜெர்மனியில் சட்டம் படித்திருக்கிறேன். விருப்ப மொழியாக தமிழ் படித்து பிராங்பர்ட் தமிழ் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். நாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் கற்றுள்ளேன். சுவிட்சர்லாந்து, லண்டன் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன். பல இசை வீடியோக்களில் நடித்திருக்கிறேன். இந்த வீடியோக்கள்தான் எனக்கு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. இலங்கை அகதிகள் கதை என்பதாலும், என் அம்மா ஒரு இலங்கை அகதி என்பதாலும் இந்த படத்தில் நடித்தேன். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!