
ஜெய்ப்பூரில் எங்கேயும் எப்போதும் சர்வானந்த் திருமணம்
சர்வானந்த்திற்கு கடந்த ஜனவரி மாதம் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே பிரிந்துவிட்டதாகத் தகவல் பரவியது. அதற்கு சர்வானந்த் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள். கடந்த 40 நாட்களாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படத்திற்காக லண்டன் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார் என்று கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜுன் மாதம் 3ம் தேதி ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் சர்வானந்த், ரக்ஷிதா திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தெலுங்குத் திரையலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் அதில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!