
தமிழில் வெற்றியைத் தவறவிட்ட கிரித்தி ஷெட்டி
அதன் பிறகு தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த "ஷியாம் சிங்கா ராய்" மட்டும்தான் வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பிறகு வந்த படங்கள் தோல்வியைத்தான் சந்தித்துள்ளன. கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் தயாராக வெளிவந்த "த வாரியர்", கடந்த வாரம் வெளிவந்த "கஸ்டடி" ஆகிய படங்களும் கிரித்தி ஷெட்டியின் தமிழ் வாய்ப்பை தோல்விக்குள்ளாக்கியது.
பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பதாக இருந்த "வணங்கான்" படத்திலும் நடித்து வந்தார். அப்படத்திலிருந்து சூர்யா விலகியதும், படத்தின் கதையை மாற்றிய இயக்குனர் பாலா, கிரித்தி ஷெட்டியையும் படத்திலிருந்து நீக்கிவிட்டார். அந்தப் படம் சூர்யா நடிக்க திட்டமிட்டபடி நடந்திருந்தால் கிரித்திக்கும் பெரிய திருப்புமுனை கிடைத்திருக்கும்.
அழகாகவும் இருந்து, தமிழ் பேசத் தெரிந்த நாயகியாகவும் இருப்பது கிரித்திக்கு பிளஸ் பாயின்ட். அவரது அடுத்த தமிழ் வாய்ப்பாவது அவருக்கு வெற்றியைத் தேடித் தரட்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!