
ஐஸ்வர்யா ராஜேஷுக்குக் கை கொடுப்பாரா பர்ஹானா ?
“கனா, திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, த கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி” என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் "கனா" படம் அளவிற்கு வேறு எந்தப் படமும் வரவேற்பையும், அவருக்கு பெரிய பெயரையும் பெற்றுத் தரவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அப்படியான படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த விதத்தில் அவர் நடித்துள்ள "பர்ஹானா" படம் இந்த வாரம் மே 12ம் தேதி வெளியாக உள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு ஏழ்மையான முஸ்லிம் குடும்பத்துப் பெண்ணை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. வாழ்வியல் சார்ந்த படமாக இப்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. "கனா" போன்ற பெயரை ஐஸ்வர்யாவுக்கு இந்த "பர்ஹானா" பெற்றுத் தருவாரா ?.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!