
இந்தியன் 2 வெளியீட்டு அறிவிப்பு எப்போது வரும் ?
கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் விபத்து, உயிரிழப்பு, தயாரிப்பாளர், இயக்குனர் மோதல் என ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்திற்கு வந்துள்ளது. ஆனாலும், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
கமல்ஹாசன், ஷங்கர் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் இப்படம் "விக்ரம்" வசூலை முறியடிக்கும் அளவில் இருக்கும் என இப்போதே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக ஷங்கர் அவரது படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆற அமர பொறுமையாகத்தான் செய்வார். அதோடு தெலுங்கிலும் அவர் இயக்கும் "கேம் சேஞ்சர்" படத்தின் வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
ரஜினியின் "ஜெயிலர்" படத்திற்கான வெளியீட்டு அறிவிப்பு வந்துவிட்ட நிலையில் "இந்தியன் 2" பட வெளியீட்டு அறிவிப்பும் வராதா என கமல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தீபாவளிக்கு வருமா அல்லது 2024 பொங்கலுக்கு வருமா என்பதுதான் தற்போயை கேள்வி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!