
வாரிசு தயாரிப்பாளரை கிண்டலடித்த வெங்கட் பிரபு
அப்படி விஜய் நடித்த "வாரிசு" படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜு, அப்பட இசை வெளியீட்டில் பேசும் போது, “டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, பைட் வேணுமா பைட் இருக்கு”, எனப் பேசியது வைரலானது. அதை வைத்து பல மீம்ஸ்களும் வந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்துள்ள "கஸ்டடி" படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய வெங்கட்பிரபு, "வாரிசு" தயாரிப்பாளர் தில் ராஜு தமிழில் பேசியதைப் போலவே, “ஸ்டைல் வேணுமா ஸ்டைல் உந்தி, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் உந்தி, பர்பாமன்ஸ் வேணுமா பர்பாமன்ஸ் உந்தி, பேமிலி சென்டிமென்ட் வேணுமா பேமிலி சென்டிமென்ட் உந்தி, என்ன வேணுமா எல்லாம் உந்தி, இ படத்துலோ, மூவிலோ, மாஸ் வேணுமா மாஸ் உந்தி” என தமிழையும், தெலுங்கையும் கலந்து பேசினார்.
அவரது பேச்சை நாகசைதன்யா கைதட்டி சிரித்து வரவேற்றார். வெங்கட்பிரபுவின் இந்த அரைகுறை தெலுங்கு பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!