
அடுத்தடுத்து அப்டேட்ஸ், ரஜினி ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ரஜினியின் இரண்டு படங்களின் அப்டேட்ஸ் வெளிவந்ததால் அவரது ரசிகர்கள் "ஹேப்பியோ ஹேப்பி" என பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கடந்த வாரம் "ஜெயிலர்" படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது.
அடுத்து இன்று நள்ளிரவில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வரும் "லால் சலாம்" பட கதாபாத்திர அறிமுகப் போஸ்டர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக அறிவித்துள்ளார்கள்.
"ஜெயிலர், லால்சலாம்" என இரண்டு போஸ்டர்களிலும் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் இருந்தாலும் அவரது ஸ்டைலே தனி அவரது ரசிகர்கள் அதைப் பற்றி பாராட்டித் தள்ளி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!