
அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு படங்கள் ரிலீஸ் ; மகிழ்ச்சியில் ரம்யா நம்பீசன்
அதேசமயம் மலையாளத்தில் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த 2017ல் நடந்த நடிகை கடத்தல் நிகழ்வு சம்பவத்திற்கு பிறகு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாலும் மலையாள திரை உலகில் சில நடிகைகளால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் நல அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு பாலியல் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததாலும் மலையாள திரை உலகில் இருந்து மறைமுகமாக ஓரம் கட்டப்பட்டார்.
ஆனாலும் அது பற்றி கவலைப்படாமல் மலையாளத்திலிருந்து தேடி வரும் வாய்ப்புகளை மட்டும் ஏற்று நடித்து வரும் ரம்யா நம்பீசன் தமிழில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் இவரது தோழி நடிகை மஞ்சு வாரியரின் சொந்த தயாரிப்பில் நடித்திருந்த "லலிதம் சுந்தரம்" என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா நம்பீசன்.
இந்த நிலையில் மலையாளத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள "பி 32 முதல் 44 வரை" என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ரம்யா நம்பீசன். வெவ்வேறு பகுதிகளில் இருந்து நகரத்திற்கு வந்து ஒரு விடுதியில் ஒன்றாக தங்கி இருக்கும் பெண்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் ஏழாம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. அதேபோல தமிழில் விஜய் ஆண்டனியுடன் இவர் ஜோடியாக நடித்துள்ள தமிழரசன் திரைப்படமும் மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் மகிழ்ச்சியில் இருப்பதாக தனது பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார் ரம்யா நம்பீசன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!