
ஒரே நாளில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாளில் ரிலீசாகும் படம்
டான்ஸ் மாஸ்டர் கலாவிடம் உதவியாளராக எஸ்.சுகன் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் இதில் அனு, ஆதேஷ் பாலா, அருள்மணி, சாம்ஸ் நடிக்கின்றனர். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, நரேஷ் இசையமைக்கிறார். பாபா கென்னடி வசனம் எழுத, வினோத் ஜாக்சன் லைவ் சவுண்ட் மூலம் ஒலிப்பதிவு செய்கிறார். விச்சூர் எஸ்.சங்கர் தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் சுகன் கூறும்போது “இதுவரை 8 குறும்படங்கள் இயக்கியுள்ளேன். முதல்முறையாக சினிமா இயக்குவதால், ஏதாவது புதுமை செய்ய விரும்பினேன். முதல் நாள் காலையில் தொடங்கும் படப்பிடிப்பை நள்ளிரவு முடிகிறது. 80 சதவிகிதம் நைட் எஃபெக்ட் காட்சிகள் இடம்பெறுகிறது. 5 லொக்கேஷன்களில், 9 கேமராக்கள் மூலம் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. வருகிற 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி அன்றே அனைத்து பணிகளையும் முடித்து 8ம் தேதி வெளியிடுகிறோம்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!