
என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன்
விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது: ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த, "எங்கேயும் எப்போதும்" படத்திற்கு நான் தான் தொகுப்பாளராக இருந்தேன். அவர்கள் தயாரித்த "மான்கராத்தே" படத்தில் நான் ஹீரோ. இன்று அவர்கள் தயாரிப்பில் உருவான, "1947 ஆகஸ்ட்16" படத்தில் நான் சிறப்பு விருந்தினர். விரைவில் புதிய அறிவிப்பை நீங்கள் கேட்பீர்கள்.
ஒருத்தர் வளர்ந்தால் சந்தோஷப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் எப்படியாவது என்கூட இருப்பவர் வளர்ந்து விட வேண்டும் என துடிப்பவர் வெகு சிலரே. வீரம் படத்தில் அஜித் சொல்வது போல் தான், கூட இருக்குறவங்கள நாம் பார்த்துக் கொண்டால், மேலே இருக்குறவன் நம்மை பார்த்துக் கொள்வார். நீண்ட இடைவேளைக்கு பின் கார்த்திக் சாரை பார்த்தேன். அழகான நடிகர். எந்த நடிகருடைய சாயலும் அவரிடம் இருக்காது. என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம். நான் பாதி ரஜினி சாருடைய நடிப்பை தான் வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!