
கீர்த்தி சுரேஷ் ஒல்லியாக மாற இதுதான் காரணம்
படத்தின் கதாநாயகனாக நானியுடன் கீர்த்தி நடிக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு "நேனு லோக்கல்" என்ற படத்தில் நடித்துள்ளார். "தசரா" படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கிராமத்துப் பெண்ணாக தெலங்கானா பகுதி தெலுங்கைப் பேசுபவராக நடித்துள்ளார் கீர்த்தி.
அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான உடனேயே படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா, கீர்த்தியை ஒல்லியாக மாற வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அதற்காக 12 கிலோ வரை தன் உடல் எடையைக் குறைத்துள்ளார் கீர்த்தி. திடீரென அவர் ஒல்லியாக மாறியதன் காரணம் இதுதான். "மகாநடி" படத்திற்குப் பிறகு கீர்த்திக்கு இந்தப் படத்தின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்ததாக "வேதாளம்" படத்தின் தமிழ் ரீமேக்கான "போலா சங்கர்" படத்தில் சிரஞ்சீவி தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!