
ஜூலையில் துருவ் விக்ரமை படத்தை துவக்குகிறார் மாரி செல்வராஜ்
இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்பு முடிந்ததும் ‛வாழை" என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய மாரி செல்வராஜ் அந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்து விட்டார். இந்தபடமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் துருவ். மேலும் கபடி விளையாட்டு தொடர்பான படம் என்பதால் அதற்கான பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு, மூன்று மாதத்தில் இந்த படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். அனேகமாக ஜூலையில் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!