
குஷி படப்பிடிப்பிற்கு மீண்டும் வந்த சமந்தா
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து வரும் "குஷி" படத்தின் படப்பிடிப்பு சமந்தாவின் உடல் நிலையைக் கருதி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது சமந்தா அப்படத்திற்காக மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
நேற்று சமந்தா "குஷி" படப்பிடிப்பிற்கு மீண்டும் வந்தது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு நேற்று படப்பிடிப்புத் தளத்தில் மகளிர் தினத்தையும் கேக் வெட்டி கொண்டாடினார் சமந்தா.
தெலுங்கில் சமந்தா நடித்து முடித்துள்ள "சாகுந்தலம்" படம் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!