
ஹாலிவுட் கவர்ச்சி நடிகை ரகுவெல் வெல்ச் காலமானார்
1973ம் ஆண்டு வெளியான "தி த்ரீ மஸ்கடியர்ஸ்" என்ற படத்தின் மூலம் உலக புகழ் பெற்றார். 1966ம் ஆண்டு இவரின் பிகினி படம் ஒன்று (அருகில் உள்ள படம்) உலக புகழ் பெற்றது. அப்போதிருந்த எல்லா பத்திரிகைகளும் இந்த படத்தை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள சலூன் கடைகளையும் அலங்கரித்த படம் இது. அதன்பிறகு ஆண்டு தோறும் பிகினி போட்டோ ஷூட் நடத்தி படங்களை வெளியிடுவார். இதனால் பாலிவுட்டில் இவரை பிகினி நடிகை என்றே குறிப்பிடுவார்கள்.
82 வயதான ரகுவெல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்சில் வசித்து வந்தார். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானார். அவருக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!