
அஜித்தை மகிழ்திருமேனி இயக்குவது உறுதியானது
இந்த நிலையில் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்து திரும்பிய அஜித், மகிழ்திருமேனியை அழைத்து கதை கேட்டுள்ளார். அந்த கதைக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட இருக்கிறது. கவுதம் வாசுதேவ மேனனிடம் உதவியாளராக இருந்து "முன்தினம் பார்த்தேனே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மகிழ்திருமேனி. இந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு இயக்கிய தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்கள் வெற்றி பெற்றது. கடைசியாக இயக்கிய கலக தலைவன் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்து அவர் அஜித்தை இயக்குகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!