
ரஜினி - லோகேஷ் படம் உருவாகுமா?
இந்த நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து பேசி உள்ளாராம் ரஜினி. அதன்படி ஏற்கனவே கமல் தயாரிப்பில் நடிப்பதற்கு தன்னிடம் கூறிய படத்தை இயக்க சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக லியோ படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பின் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார். அதன்பின் ஜெய்பீம் இயக்குனர் ஜானவேல் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. அதன்பிறகே லோகேஷ் படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கினால் கைதி 2 தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!