
பெண் இயக்குனர்களை குறுகிய வட்டத்திற்கும் அடைக்காதீர்கள் : பிருந்தா மாஸ்டர்
ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார். படம் வருகிற பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் குறித்து பிருந்தா மாஸ்டர் கூறியதாவது: எனது முதல் படம் காதல் படம் என்பதால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அடுத்த படம் இயக்க முடிவு செய்தேன். காரணம் பெண் இயக்குனர்கள் என்றால் இப்படியான படம்தான் எடுப்பார்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப்படுகிறார்கள். சுதா கொங்கரா போன்றவர்கள் அதை உடைத்திருக்கிறார்கள். நானும் அதை செய்ய விரும்பினேன். அதுதான் இந்தப்படம்.
தூத்துக்குடி பகுதியில் அடிதடி செய்யும் தாதாக்களை தக்ஸ் என்பார்கள். அவர்களை பற்றிய படம்தான் இது. வெவ்வேறு கிராமங்களில் சூழ்நிலை காரணமாக தவறு செய்தவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து தப்பும் அவர்கள் எப்படி தக்ஸாக மாறுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் படம். என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!