
கிண்டலடிக்கப்பட்ட ஆடையுடன் போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்
“என்ன மேடம், தெலுங்குப் பட ஷுட்டிங்கிலிருந்து அப்படியே திருமணத்திற்குப் போய்விட்டீர்களா,” என்று தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தார்கள். பலத்த கிண்டலுக்கு ஆளான அந்த ஆடையுடன் ஒரு போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். தன்னைக் கிண்டல் செய்து பதிவிட்டவர்களுக்கு பதிலடியாகத்தான் அந்த போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் போலிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்துள்ள "தசரா" படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் "போலா சங்கர்" படத்தில் நடித்து வருகிறார். தமிழில் "மாமன்னன்" படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து "சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!