
சின்ன கல்லு, பெத்த லாபம் நடிகர் கைகலா சத்யநாராயணா மரணம்
வில்லன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என பல்வேறு தெலுங்குத் திரைப்படங்களில் நடித்தவர் சத்யநாராயணா. அவரது மறைவு தெலுங்குத் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கவுட்டராம் என்ற ஊரில் 1935ம் ஆண்டு பிறந்தவர். "சிப்பட்டி குத்துரு" என்ற படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமானார்.
மறைந்த தெலுங்கு நடிகர் என்டிஆர், சத்யநாராயணாவின் திறமையைக் கண்டறிந்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கினார். பின்னர் அவர் என்டிஆருக்காக "டூப்" ஆகவும் கூட நடித்துள்ளார். சுமார் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். 2019ம் ஆண்டு வெளிவந்த "மகரிஷி" திரைப்படம்தான் அவர் நடித்த கடைசிப்படம்.
தமிழில் கமல்ஹாசன், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த "பஞ்ச தந்திரம்" படத்தில் ஸ்ரீமன் மாமனாராக நடித்தவர். "சின்ன கல்லு பெத்த லாபம்" என்ற வசனம் பேசி படத்தில் கலகலப்பூட்டியவர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!