
திரையுலகில் 5 ஆண்டுகள்: கல்யாணி பிரியதர்ஷன் நன்றி
“இந்தப் பதிவின் மூலம் நான் திரையுலகத்தில் நழைந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். எனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஒவ்வொரு புதிய ரசிகர் மூலம் ஒரு துளி அன்பு கிடைக்கப் பெற்றாலும் நன்றி. கடந்த ஐந்து வருடங்களாக எனது பயணத்தில் முதல் நாள் முதல் தற்போது வரை உடனிருக்கும் அனைத்து மொழி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும், நீங்கள் யாரென்றும் எனக்குத் தெரியும். இனி வரும் காலங்களிலும் நீங்கள் உடனிருந்தால் எனது வளர்ச்சி தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு, தமிழ்? மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் கல்யாணி தமிழில் "ஹீரோ, மாநாடு" ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!