
பூத கோலா விழாவில் அனுஷ்கா
பூத கோலா விழாவில் பஞ்சூர்லி நடன ஆராதனை நடைபெறுவதுதான் "காந்தாரா" படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இடம் பெற்று ரசிகர்களைக் கவர்ந்தது. அப்படிப்பட்ட ஒரு திருவிழாவில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. வட கர்நாடகாவின் மங்களூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் அனுஷ்கா. அவரது குடும்பத்தினருடன் அந்த திருவிழாவிற்கு அனுஷ்கா சென்றதும், பஞ்சூர்லி நடனத்தை அவர் வீடியோ எடுத்ததையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
"காந்தாரா" படத்திற்கப் பிறகு பூத கோலா, பஞ்சூர்லி உள்ளிட்ட வட கர்நாடகா பகுதி மக்களின் தெய்வ வழிபாட்டு முறை இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் பிரபலமாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!