
கோலார் தங்க வயலில் ரசிகர்களை சந்தித்து பேசிய விக்ரம்
இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் கேஜிஎப் தங்க வயல் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விக்ரம் மற்றும் பசுபதி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . அதில் விக்ரம் தங்கலான் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே கோலார் தங்க வயலில் தமிழ் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!