
திருப்பதியில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்" படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இருதினங்களுக்கு முன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி நேற்று இரவு திருப்பதி சென்றார். அங்கு டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். தொடர்ந்து இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றிருந்தார். பின்னர் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛6 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!