
அமெரிக்கா, யுகே-வில் துணிவு ஜனவரி 11ல் வெளியீடு
இதனிடையே, படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள லைக்கா நிறுவனம் அமெரிக்கா, யுகே நாடுகளில் "துணிவு" படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை போஸ்டருடன் டுவீட் செய்துள்ளது. பொதுவாக இந்தியாவில் குறிப்பிட்ட தினத்தில் காலையில் வெளியானால், அமெரிக்க நேரப்படி ஒரு நாள் முன்னதாக அங்கு வெளியாகும். அப்படிப் பார்த்தால் ஜனவரி 12ம் தேதியன்று இந்தியாவில் "துணிவு" வெளியாகும் எனத் தெரிகிறது.
தேதியுடன் கூடிய இந்திய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அமெரிக்கா, யுகே வெளியீடு பற்றிய அறிவிப்பு முதலில் வெளியாகியுள்ளது. அது போலவே விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள "வாரிசு" படம் அமெரிக்காவில் ஜனவரி 12 வெளியாகும் என அதன் அமெரிக்க வினியோகஸ்தர் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இரண்டு படங்களின் வெளிநாட்டு வெளியீட்டுத் தேதிப்படி பார்த்தால் "துணிவு" படம் ஜனவரி 12ம் தேதியும், "வாரிசு" படம் ஜனவரி 13ம் தேதியும் தமிழகத்தில் வெளியாகலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!