
கணவர் ஒரு சாடிஸ்ட்: விவாகரத்துக்கு பின் மனம் திறந்த வைக்கம் விஜயலட்சுமி
ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு நிலைமை மாறியது. இவரது விவாகரத்து செய்தி அரசல் புரசலாக வெளியானதே தவிர அதற்கான காரணமும் எதுவும் தெரியவில்லை. அதுகுறித்து வைக்கம் விஜயலட்சுமியும் எதுவும் பேசவில்லை. இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விவாகரத்துக்கான காரணம் குறித்து விஜயலட்சுமி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசும்போது, “என்னை திருமணம் செய்த நபர் சாடிஸ்ட் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை முழுநேர பணியாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதையெல்லாம் விட எனது பாடல் தொழிலை மேற்கொள்வதற்கு பல நிபந்தனைகளை விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை.
நான் எப்போதுமே பாடல்களுக்கு முன்னுரிமை தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி. முத்தாய்ப்பாக, “உங்களுக்கு பல்வலி என்றால் அதை பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு அளவுக்கு அதிகமானால் அதை நீக்குவதை தவிர வேறு வழி இல்லை” என்றும் கூறியுள்ளார் விஜயலட்சுமி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!