
சூர்யா அறிவித்து விலகிய 3 படங்கள்
இதற்கு முன்பு அவருக்கு கமர்ஷியல் அடையாளத்தை "காக்க காக்க" படத்தின் மூலம் ஏற்படுத்தித் தந்த கவுதம் மேனன் இயக்கத்தில் "துருவ நட்சத்திரம்" படத்தில் நடிப்பதாக அறிவித்து பின் விலகினார். அதற்குப் பிறகு "சிங்கம்" படத்தின் மூலம் மிகப் பெரும் வசூலை சூர்யாவுக்கு ஏற்படுத்தித் தந்த ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட "அருவா" படத்திலிருந்தும் விலகினார். இப்போது "வணங்கான்" படத்திலிருந்தும் விலகியுள்ளார்.
சூர்யா நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்திலும் சூர்யா நடிக்க மற்றொரு படமும் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அது போல பாலா இயக்கத்தில் இனி சூர்யா நடிப்பாரா என்பதை பாலா மட்டுமே முடிவு செய்வார் என்று சொல்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!