
35வது ஆண்டில் பேசும் படம் : நினைவு கூறும் கமல்ஹாசன்
தமிழகத்தில் "பேசும் படம்", வட மாநிலங்களில் "புஷ்பக்", கேரளா, ஆந்திராவில் "புஷ்பக விமானம்", கர்நாடகாவில் "புஷ்பக விமானா" என்ற பெயர்களில் வெளியானது. ஆனால், அந்த ஆண்டிற்காக வழங்கப்பட்ட 35வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னட சினிமாவாக எடுத்துக் கொள்ளப்பட்டு, முழு பொழுதுபோக்கு படமாக அமைந்ததற்கான தேசிய விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது.
நேற்றுடன் இந்தப் படம் வெளிவந்து 35து ஆண்டுகள் ஆனதையொட்டி படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன், ““என்னுடைய இயக்குனர்களிலேயே இளமையானவர் சிங்கீதம் சீனிவாசராவ்தான். நாங்கள் உருவாக்கிய "புஷ்பக்" இப்போது எங்களை விட மூத்துவிட்டது. அதற்கு 35 வயதாகிறது. சிங்கீதம் சார்... நாம் நமது கலையை மூப்படைய விடாதிருப்போம் சார்...” இதற்கும் நீங்கள் களுக்கென்று சிரிப்பீர்கள். அந்தச்சிரிப்புதான் இன்றும் எனக்குப் பிரியமான இசை,” என படத்தைப் பற்றி டுவிட்டரில் நினைவு கூர்ந்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!