
வடிவேலு பெயரை முதலில் போட்ட மாமன்னன் படக்குழு
ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. நேற்று உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு "மாமன்னன்" படக்கழு ஏஆர் ரஹ்மானின் வாழ்த்து வீடியோவுடன் படத்தின் சிறு முன்னோட்டம் ஒன்றையும் வெளியிட்டது.
அந்த வீடியோவின் இறுதியில் படத்தின் நட்சத்திரங்கள், டெக்னீஷியன் அடங்கிய போஸ்டரில் வடிவேலு பெயரைத்தான் முதலில் போட்டிருக்கிறார்கள். அவருக்கு அடுத்து பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயர்களைப் போட்டுவிட்டு கடைசியாகத்தான் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொதுவாக எந்த ஒரு படத்தின் டைட்டில் சம்பந்தப்பட்ட போஸ்டர்களிலும் கதாநாயகன் பெயரைத்தான் முதலில் போடுவார்கள். அப்படியிருக்க இந்தப் படத்தின் போஸ்டரில் அவருடைய பெயரைக் கடைசியில் போட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!