
இரட்டைக் குழந்தைகளுக்கு சூரத்தில் பெயர் சூட்டு விழா நடத்திய நமீதா!
அப்போது நமீதாவின் மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா, மற்றும் கியான்ராஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து நமீதா சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், கிருஷ்ணா ஆதித்யா, கியான்ராஜ் என்ற இரண்டு பிள்ளைகளும் என்னுடைய அழகான அற்புதங்கள். எனக்கு கடவுள் கிருஷ்ணர் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள். அதன் காரணமாகவே இரண்டு குழந்தைகளுக்கும் கிருஷ்ணரின் பெயரை சூட்டி உள்ளேன். சூரத்தில் நடைபெற்ற இந்த பெயர் சூட்டு விழாவில் எனது உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள் என்று நமீதா பதிவிட்டு இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!