
‛வாழை - மாரி செல்வராஜின் அடுத்த படம் துவங்கியது
இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்து வாழை என்ற படத்தை இயக்குகிறார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இந்த படத்தை மாரி செல்வராஜும் இணைந்து தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 21) ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் துவங்கியது. இதை நடிகர் உதயநிதி துவக்கி வைத்தார். 1994ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. படத்தில் நான்கு சிறுவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!