
பொன்னியின் செல்வன், காந்தாரா படங்களின் வெற்றிக்கு காரணம் - கங்கணா புது தகவல்
அதில், பொன்னியின் செல்வன், காந்தாரா படங்களில் வரும் காட்சிகள் ஹிந்து மற்றும் இந்திய தன்மை நிறைந்த காட்சிகளாக இடம்பெற்றுள்ளது. இந்த படங்கள் ஹிந்துமதம் தொடர்புடையதாக இருப்பதால்தான் அதிக அளவிலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தால் பாலிவுட் சினிமா நம்முடைய கலாச்சாரத்தில் இருந்து விலகி செல்கிறது. இதன் காரணமாகவே இந்திய தன்மையுடன் உருவாகும் தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெற்று வருகின்றன. இதில் நல்ல விஷயம் என்னவென்றால், நம்முடைய மக்கள் நம் கலாச்சார ரீதியான படங்களுக்கு வரவேற்பு கொடுக்க தொடங்கி விட்டார்கள் என்பது இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார் கங்கணா ரனாவத்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!