
அஜித் ஜோடியாக 5வது முறையாக இணையும் திரிஷா
"துணிவு" படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் "ஏகே 62" படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அஜித். இதற்கான முதற்கட்ட அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், குழுவினர் மற்றும் தயாரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் ஸ்கிரிப்டை விக்னேஷ் சிவன் முடித்துவிட்டதாகவும், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் பிப்ரவரி 2023ல் தொடங்கும் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது, நடிகை திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "ஏகே 62" படத்தின் கதாநாயகியாக நடிக்க திரிஷாவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி உண்மையானால், "ஜீ", "கிரீடம்", "மங்காத்தா", "என்னை அறிந்தால்" ஆகியப் படங்களைத் தொடர்ந்து திரிஷா, அஜித்துடன் நடிக்கும் ஐந்தாவது படம் இதுவாகும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!