
இந்து சர்ச்சையால் பொன்னியின் செல்வனுக்கு இன்னும் நூறு கோடி கிடைக்கலாம் : பார்த்திபன்
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறிய பழுவேட்டரையராக நடித்த பார்த்திபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், பொன்னியின் செல்வன் படம் 400 கோடியை கிராஸ் பண்ணி விட்டது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழுப்பலாம். எழுப்பினால் இன்னும் ஒரு 100 என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படம் வெளியான போது ராஜராஜ சோழன் இந்துவா? இந்து மதம் இல்லையா? என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தது. இயக்குனர் வெற்றிமாறன் அது குறித்து கருத்து வெளியிட்ட நிலையில் கமல்ஹாசனும் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!