ஜெயிலர் - ரஜினிக்கு வரவேற்பு கொடுத்த புதுச்சேரி ரசிகர்கள்
Advertisement
Advertisement
ஜெயிலர் - ரஜினிக்கு வரவேற்பு கொடுத்த புதுச்சேரி ரசிகர்கள்
அக் 14, 2022
அ நிறம் | அளவு
Advertisement
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கடலூரில் நடத்தி வருகிறார் நெல்சன். இந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு அருகே உள்ள அழகிய நத்தம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்று பாலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி அங்கு சென்றார். செல்லும் வழியில் புதுச்சேரி ரசிகர்கள் அங்கு ரஜினிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து தனது காரின் கண்ணாடியை இறக்கி வைத்துக் கொண்டு ரசிகர்களை பார்த்து கையெடுத்து வணங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தபடி அங்கே என்ட்ரி கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். இது குறித்து புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!