
மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகும் காந்தாரா
கடந்த வாரம் முதல் கன்னட பதிப்பு கர்நாடகா தவிர பிற மாநிலங்களிலும் வெளியானது. இருப்பினும் படத்தை அந்தந்த மாநில மொழிகளில் ரசிகர்கள் பார்த்தால் வசூல் அதிகம் கிடைக்கும் என திட்டமிட்ட படக்குழுவினர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்துள்ளனர்.
நாளை மறுநாள் அக்டோபர் 14ம் தேதி ஹிந்தியிலும், அக்டோபர் 15ம் தேதி தமிழ், தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். முன்னதாக தமிழில் 16ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். பின்பு மாற்றிவிட்டனர். மலையாள மொழி வெளியீடு பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைப் போலவே மற்ற மொழிகளிலும் கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கான டிரைலரை நடிகர் கார்த்தி 3 மணிக்கு வெளியிட்டார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!