
முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி
கடந்த சில வருடங்களாக அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனோ தாக்கத்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வருகை குறைந்து போனது. ஓடிடி தளங்கள் வந்ததாலும் தியேட்டர்களுக்கு எப்போதோ வருகிறவர்களும் கூட ஒரு மாதம் காத்திருந்து புதிய படங்களை தியேட்டர்களில் பார்த்தார்கள்.
ஆனால், "பொன்னியின் செல்வன்" படம் தியேட்டர்களுக்கு வருவதை கடந்த சில வருடங்களாக நிறுத்திவிட்ட முதியோர்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்திருக்கிறது. அதிகாலை 4.30 மணி சிறப்பு காட்சியிலேயே பல முதியோர்களைப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் குடும்பம் குடும்பமாக கைக் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு தாய்மார்களும், தங்கள் வயதான பெற்றோர்களை அழைத்துக் கொண்டும் பலரும் வந்து போகிறார்கள் என தியேட்டர் வட்டாரங்கள் மகிழ்ச்சியாக உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!