
ராஜமவுலி படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்
ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்த படத்தின் கதை ஆப்ரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ‛தோர்" மற்றும் ‛அவெஞ்சர்ஸ்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மகேஷ்பாபு - ராஜமவுலியின் படம் துவங்குவதற்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!