
சிம்புவுக்கு சொகுசு கார் பரிசு: தயாரிப்பாளரின் தாராளம்
இயக்குனர் கவுதம் மேனனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மதிப்பிலான புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து படத்தின் சக்சஸ் மீட்டில் நடிகர் சிம்புவுக்கு உயர்தர சொகுசு கார் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளன.
சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றபோது அதன் இயக்குனருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார். தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் பாலோ பண்ணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!