
இயக்குனர் ஆன நடிகர் ரவி ராகுல்
படம் பற்றி ரவி ராகுல் கூறியதாவது: இயக்குனர் ஆகும் கனவில் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் நடிகர் ஆகிவிட்டேன். என் இயக்குனர் கனவை நனவாக்கும் வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது. அதனை சிறப்பாக செய்திருப்பதாக நம்புகிறேன். ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, அவனை வெளிமாநிலம் அழைத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள். தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை நாயகி தேடுவது தான் மீதி கதை. குற்றாலத்தில் தொடங்கி, ஐதராபாத், கோல்கட்டா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார் இயக்குனர் ரவி ராகுல்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!