
சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தில் அம்மு, கோமல்
திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பி.சதீஸ் குமரன் இயக்குகிறார். சைக்கலாஜிகல், பேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகிறது. ஶ்ரீபதி, ஶ்ரீகுமார், விஜித், ராம், பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சைமன் கிங் இசை அமைக்கிறார், ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பி.சதீஸ்குமரன் கூறியதாவது: நான் 20 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக இருக்கிறேன். விளம்பர படங்கள், குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இயக்குநர் ஷங்கரின் ஐ படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றினேன். இந்த படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் பேண்டஸி திரில்லர் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தில் முதல்முறையாக 8 கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் சொல்லப்படும் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது. இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!