
புஷ்பா 2 - அதிக சம்பளம் பெறும் இயக்குனர் சுகுமார்
நேற்று "புஷ்பா 2" படத்தின் பூஜை நடைபெற்றது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் பட்ஜெட்டை அதிகமாக்கியுள்ளார்கள். அதில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அடுத்தபடியாக இயக்குனர் சுகுமாரின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாம். இரண்டாம் பாகத்திற்காக அவருடைய சம்பளம் 50 கோடியாம். மேலும், படத்தின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அவருக்கு உண்டாம்.
தெலுங்குத் திரையுலகத்தில் 100 கோடியை சம்பளமாகக் கடந்த ஒரே இயக்குனர் ராஜமவுலி. அவருக்கடுத்து 50 கோடிக்கும் அதிகமான சம்பளம் பெறும் இயக்குனராக சுகுமார் உயர்ந்திருக்கிறார் என்கிறது டோலிவுட் வட்டாரம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!